எந்த ஹீரோவுக்கும் நோ லிப் டு லிப் கிஸ் தமன்னா தடாலடி!!!

7th of June 2014
சென்னை:எந்த ஹீரோவுக்கும் உதட்டோடு உதடு முத்தம் தரமாட்டேன் என்றார் தமன்னா.குடும்பப்பாங்கான நடிகை என்று சமீபகாலமாக கோலிவுட்டில் அழைக்கப்பட்டுவருபவர் லட்சுமி மேனன். ‘நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இதையடுத்து ‘மஞ்சப் பை என்ற படத்திலும் விமலுடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து அசத்தினார். கிளாமர் ஹீரோயின் என்று சொல்லப்படும் தமன்னா முத்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார். இந்தியில் அவர் நடித்துள்ள ‘ஹம்சகல்ஸ் என்ற படத்தில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிக்கச் சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்த தமன்னா, டூ பீஸ் அணிந்துகொண்டு அதற்குமேல் லேசான டாப் உடையும், ஷார்ட்சும் அணிந்து நடித்தார்.‘
 
நீச்சல் உடை பிடிவாதம், உதட்டோடு உதடு முத்தம் தரமறுக்கும் பிடிவாதம் எப்போது தளரும் என்று தமன்னாவிடம் கேட்டபோது,‘ஏற்கனவே இதுபற்றி நான் சொல்லி இருக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன் நீச்சல் உடை அணியமாட்டேன், ஹீரோவுக்கு உதட்டோடு உதடு முத்தம் தர மாட்டேன் என்ற முடிவில் மாற்றம் இல்லை. நான் சொன்னது சொன்னதுதான் என்றார்.

Comments