2nd of June 2014
சென்னை:தீபிகா படுகோன் நடிக்கவிருந்த வாய்ப்பு ஹன்சிகாவுக்கு மாறியது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தையடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தீபிகா படுகோன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகாவுக்கு மாறி இருக்கிறது. ஏற்கனவே ‘வேலாயுதம் படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். தற்போது இப்படம் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளார்.இதுபற்றி சிம்புதேவன் தரப்பில் கூறும்போது,‘பல்வேறு ஹீரோயின்கள் பெயர்கள் விஜய் ஜோடியாக நடிக்க பரிசீலிக்கப்பட்டது. கடைசியில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது என்றனர்.
Comments
Post a Comment