25th of June 2014
சென்னை:தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அதனால் முதலில் ஒரு இந்தி படத்தில்தான்
அறிமுகமானார். ஆனால் அதையடுத்து அவரை அங்குள்ள டைரக்டர்கள்
கண்டுகொள்ளவில்லை. அதனால், ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
அப்படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து தமிழில் தான் இயக்கிய கேடி
படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே
படத்தில்தான் இன்னொரு நாயகியாக இலியானாவும் தமிழுக்கு வந்தார்.
ஆனால்,
பின்னர் இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில்
ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால் சில படங்களிலேயே ஒரு இடத்தை
பிடித்து விட்டவர், பின்னர் சிறந்த கமர்சியல் நடிகை ஆனார். அந்த வகையில்
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய நடிகையாகி விட்ட அவருக்கு
தாய்மொழியான இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது.
அதனால், தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த தமன்னா, ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படி ஓடவில்லை. இருப்பினும் தீவிர முயற்சிக்குப்பிறகு சமீபத்தில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தபட்மும் தோல்வியடைந்து தமன்னாவின் இந்திய சினிமா கனவை கலைத்து விட்டது.
இதனால், மறுபடியும் தெற்கு நோக்கி தனது பரிவாரங்களோடு வந்து விட்ட தமன்னா, இங்குள்ள அபிமான டைரக்டர்களிடம் சரணடைந்துள்ளார். அதோடு, படாதிபதிகளை சந்தித்து, கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு மிரட்ட மாட்டேன். நீங்களாக பார்த்து கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, சான்ஸ் கேட்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment