15th of June 2014
குயின் படத்தின் மிகப்பெரிய வெற்றி கங்கனாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஒட்டு மொத்த பாலிவுட்டின் பார்வையையும் கங்கனா மீதுதான் திரும்பியுள்ளது. இந்த வருடம் மட்டும் கங்கனா நடிப்பில் ரிவால்வர் ராணி உள்பட மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இது தவிர அரை டஜன் படங்கள் கங்கனாவின் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று கஹானியை இயக்கிய சுஜாய் கோஸின் துர்கா ராணி சிங்.
இந்தப் படத்தின் நாயகி 14 வயது சிறுமிக்கு தாயாக நடிக்க வேண்டுமாம். மூளை வளர்ச்சி பாதிப்படைந்த இந்த சிறுமிக்கும், தாய்க்கும் நடுவிலான உறவுதான் கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் 35 வயது தாயாக நடிக்க சுஜாய் கோஸ் கங்கனா ரணாவத்தை கேட்டிருக்கிறார்.
படத்தின் கதையும்- கதாபாத்திரமும் பிடித்ததால் கங்கனா நடிக்க ஒப்புக்கொண்டாராம். முதலில் இந்த வேடத்தில் வித்யா பாலன்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இந்த வாய்ப்பு கங்கனாவிற்குச் சென்றது. சமீபத்தில்தான் கங்கனா தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடினார். 27 வயதானவர் 14 வயதான சிறுமிக்கு தாயாக நடிப்பது ஆச்சர்யம்தான்.
Comments
Post a Comment