27th of June 2014
சென்னை:பிரபல வார இதழ் ஒன்றில் விஜய்யின் பிறந்தநாள் சிறப்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ’அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்’ என்று கூறப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த ரஜினியின் ரசிகர்களின் எதிர்ப்பால் அந்த கருத்துக்கணிப்பும் திரும்பப் பெறப்பட்டது.

விஜய்க்கு
கொடுத்த பட்டம் திரும்பப் பெறபட்டதால் வெகுண்ட விஜய் ரசிகர்கள் ரஜினியைப்
பற்றி தவறாக பேச... ரஜினி ரசிகர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். தற்போது
சமூக வலைதளங்களிலும், சுவரொட்டிகள் மூலமாகவும் தங்களது கோபத்தை
தீர்த்துகொண்டு வருகின்றனர் இருதரப்பினரும்.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் விஜய்க்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து ரஜினி ரசிகர்கள் கிண்டலாக உருவாக்கியிருக்கும் ஒரு வீடியோ உலவிவருகிறது. அந்த வீடியோவில், விஜய் தளபதி என்ற பட்டத்தை திருடிவிட்டதாகவும், தலைவா பட்டத்தை பறித்துக்கொண்டதாகவும், அடுத்து சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுவதாகவும்... இதை தங்களால் ஜீரணிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
Comments
Post a Comment