உதயநிதியிடம் ஒருதலைக்காதலில் விழுந்த ஷெரீன்!!!

13th of June 2014
சென்னை:துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுடன் அறிமுகமாகி இளவட்டங்களை கிறங்கடித்த தெற்றுப்பல் அழகி ஷெரீனை ஞாபகமிருக்கிறதா..? தொடர்ந்து ‘ஸ்டூடண்ட்ஸ் நம்பர்-1’, ‘விசில்’, ‘உற்சாகம்’ என சில படங்களில் நடித்தவர் கடைசியாக தமிழில் நடித்தது 2010ல் வெளியன ‘பூவா தலையா’ படத்தில்தான்.
 
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஷெரீன் மீண்டும் உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி
ஆகியிருக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ஷெரீனுக்கு உதயநிதியை ஒருதலையாய் காதலிக்கும் கதாபாத்திரமாம். ஜெகதீஷ் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது.

Comments