ஆர்யாவின் நெருங்கிய தோழியான அனுஷ்கா, அமரகாவியம் பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்!!!

30th of June 2014
சென்னை:ஆர்யாவின் நெருங்கிய தோழியான அனுஷ்கா, அவர் அழைத்தும் பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.ஆர்யாவின் சொந்த படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா ஹீரோ. இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் தன¢னுடன் நடித்த ஹீரோயின்களையெல்லாம் அழைத்தார் ஆர்யா. அதிலும் தன்னுடன் நெருக்கமாக பழகிய ஹீரோயின்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
 
அந்த விதத்தில் விழாவில் நயன்தாரா, திரிஷா, பூஜா, லேகா வாஷிங்டன் உள்ளிட்ட ஹீரோயின்கள் பங்கேற்றனர். இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது, அவருடன் நெருக்கமாக பழகியதாக அனுஷ்கா கிசு கிசுக்கப்பட்டார். அமர காவியம் விழாவுக்கு அனுஷ்காவையும் ஆர்யா அழைத்தாராம்.
 
$நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் ஆரம்பம் முதலே பனிப்போர். இதனால் ஆர்யா அழைப்பை நிராகரித்துவிட்டாராம் அனுஷ்கா. முதல் பாடல் சிடியை நயன்தாரா வெளியிட, அனுஷ்கா பெறுவதுபோல்தான் ஆர்யா பிளான் போட்டாராம். அவர் விழாவை புறக்கணித்ததாலேயே திரிஷாவை சிடி பெற வைத்தாராம்.

Comments