14th of June 2014
சென்னை:தனது நண்பர் நேஸ் வாடியா மீது நடிகை பிரித்தி ஜிந்தா அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, வாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணையை துவக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது முன்னாள் காதலனும் நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கூறியுள்ளார்.கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்த போது,
ஸ்டேடியத்தின் கார்வார் பெவிலியனில் வைத்து தன்னை பலர் முன்னிலையில் அசிங்கமாகப் பேசியதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் நெஸ் வாடியா மீது புகார் கொடுத்துள்ளார் ப்ரீத்தி.எழுத்துப் பூர்வமாக ப்ரீத்தி கொடுத்த புகாரின்பேரில், நெஸ் வாடியா மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 506 மற்றும் 509-ன் கீழ் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.ப்ரீத்தியிடம் முதல் தகவலறிக்கையும் தரப்பட்டுள்ளது.யார் நெஸ் வாடியா?ப்ரீத்தியும் நெஸ் வாடியாவும் முன்பு இணைந்து வாழ்ந்தனர். 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.உறவில் பிரிந்தாலும் இருவரும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக வியாபாரத்தைத் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் நெஸ் வாடியா வே பெண்ணுடன் சுற்ற ஆரம்பித்தாராம்.இதை ப்ரீத்தி ஜிந்தாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை - பஞ்சாப் அணிகள் மைதானத்தில் மோதிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் ஒரு மூலையில் ப்ரீத்தியும் நெஸ் வாடியாவும் கடுமையான வாக்குவாதத்தில் மோதிக் கொண்டிருந்தார்களாம். அதைத் தொடர்ந்துதான் இந்த செக்ஸ் தொல்லைப் புகாரைக் கொடுத்துள்ளார் ப்ரீத்தி.
Comments
Post a Comment