27th of June 2014
சென்னை:நடிகர், நடிகைகள் ஜோடி போட்டு பேட்மின்டன் ஆட உள்ளனர்.நட்சத்திர கிரிக்கெட் மோகம் முடிந்து அடுத்து பேட்மின்டன் மோகம் கோலிவுட்டில் தலைதூக்கி இருக்கிறது.
நட்சத்திர கிரிக்கெட்டில் நடிகர்கள் மட்டும் பங்கேற்றனர். பேட்மின்டன் போட்டியில் நடிகர்களுடன் நடிகைகளும் ஜோடி சேர்கின்றனர். இதில் விளையாடுவதற்காக இதுவரை 50 நட்சத்திரங்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆர்யா, ஜெயம் ரவி, சிவா, ஆரி, நரேன், பரத், வெங்கட்பிரபு, ஆதி, ஓவியா, லட்சுமிராய், ரூபா மஞ்சரி, அமலா பால், ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்கிறார்கள். இவர்களை உள்ளடக்கிய 5 டீம்கள் பிரிக்கப்பட்டு வரும் ஜூலை மாதம் முதல்வாரத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்க உள்ளது. பேட்மின்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக இந்த போட்டியை இந்தியன் பேட்மின்டன் செலிபிரட்டி லீக் என்ற அமைப்பு நடத்துகிறது.
Comments
Post a Comment