மலேசியாவில் ரசிகரின் கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்!!!

23rd of June 2014
சென்னை:விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவரது மனைவுயும், மலேசியா சென்று இருந்தனர்.

அங்குள்ள ஓட்டலில் தங்கியருந்த அவர்களை, மலேசியாவில் உள்ள விஜயகாந்த ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதற்காக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவிடம் முன் அனுமதி வாங்கியிருத்நாகவும் கூறப்படுகிறது.
 
அதன்படி ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத் தாராம்.
 
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் ரசிகர்கள் ஒவ்வொருவராக வந்து போட்டோ எடுத்து சென்றனர்.

Comments