ரஜினி, விஜய், விஷால் படங்கள் தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது!!!

11th of June 2014
சென்னை::இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடித்ததாக கூறப்பட்ட அனிமேஷன் படம் வெளியானபோதும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும், தமிழ் நாட்டிற்குள் ஓடாத ரஜினி படம், வெளிநாடுகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதாக பில்டப் செய்திகளை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சினிமாவில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை குறைக்கும் முயற்சியாக, லிங்கா படத்தை வேகமாக முடித்து, வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார், இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும் சீக்கிரமே பாடல்களை தருமாறும் அவரை கேட்டுக்கொண்டு வருகிறாராம். ஆக, இந்த தீபாவளிக்கு லிங்கா வெளிவருவது உறுதிதான் என்கிறார்கள்.
 
இதற்கிடையே, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடத்தும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பூஜை படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை தொடங்கும்போதே தீபாவளி ரிலீஸ் செய்து சொல்லித்தான் ஆரம்பித்தார் விஷால். அதேபோல், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தியும் தீபாவளிக்கு வந்து விடும். தற்போது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதால், அப்படம் வெளிவருவதும் உறுதியாகியுள்ளது.
 
ஆனால், இந்த பட்டியலில் கெளதம்னேன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் படம் மட்டுமே இன்னும் உறுதியில்லாமல் இருக்கிறது. தீபாவளிக்கு வந்து விடும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லிக்கொண்டாலும், கெளதம்மேனன் தரப்பில் ட்ரை பண்றோம், பார்க்கலாம் என்கிறார்கள். ஆக, அஜீத் படம் படம் இந்த தீபாவளி ரேஸில் இருந்து விலகிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 
அதேசமயம், இது இப்போதைக்கு வெளியாகியுள்ள தகவல் தான் என்றாலும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இதில் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.

Comments