செப்டம்பரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’!!!

5th of June 2014
சென்னை:ஜெயம்கொண்டான்’ மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் ஆசிபெற்ற இவர் ‘சேட்டை’ படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் ‘
 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
 
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படும் நட்பையும், அதன் பிறகு எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களையும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகி விசாகா சிங் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது..

Comments