கவிஞர் பிறைசூடன் மகன் இசையமைப்பாளர் ஆனார்!!!

19th of June 2014
சென்னை:கவிஞர் பிறைசூடனின் மகன் கே.ஆர்.கவின், ‘ஒரு மோதல் ஒரு காதல்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இவருடைய இசையில் உருவாகும் இரண்டாவது படம், ‘மெய் மறந்தேன்.’ இந்த படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த பாடல்களை சின்மயி, திப்பு, மனோ, அனுராதா ஸ்ரீராம், விஜய் ஜேசுதாஸ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கானா பாலா ஆகியோருடன் கவினும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

பாடல்களை பிறைசூடன், பா.விஜய், அண்ணாமலை, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். பாபு கே.செல்வராஜன் ஒளிப்பதிவு செய்ய, வி.முத்துக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார். சி.ஜி.எம்.பிக்சர்ஸ் சார்பில் ஜி.மணிவண்ணன் தயாரிக்கிறார்.


சஞ்சய்–சானியாதாரா ஜோடியுடன் மூணார் ரமேஷ், ரிஷா, ஆண்டனி, எலிசபெத், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி, தஞ்சை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

காதலுக்கு பல ரூபங்களில் எதிர்ப்புகள் வரும். இந்த படத்தில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் எதிர்ப்பு வருகிறது. அந்த எதிர்ப்பை மீறி கதாநாயகன் எப்படி கதாநாயகியை மணக்கிறான்? என்பதே கதை.

Comments