ஜெயம்ரவி, ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் ரோமியோ ஜூலியட் படத்திற்காக ஒரு கோடி செலவில் குத்துப்பாடல்!!!
2nd of June 2014
சென்னை:ஜெயம்ரவி, ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட்.
சென்னை:ஜெயம்ரவி, ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட்.
எஸ். ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த லஷ்மன் இப்படத்தை
இயக்குகிறார். இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இமான் இசை
அமைக்கிறார். எஸ்.சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறர். மெட்ராஸ்
எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரிக்கிறார்.
இந்திய கலாச்சாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும் மேல்நாட்டு கலாச்சாரத்தில்
வாழும் ஹீரோயினுக்கும் இடையில் வரும் காதலும், ஈகோவும்தான் படத்தின் கதை.
சமீபத்தில் இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே உள்ள ஒரு காலி
மைதானத்தில் பிரமாண்ட செட் அமைத்து ஜெயம்ரவி, ஹன்சிகா சம்மந்தப்பட்ட
குத்துப்பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள்.
ஆர்ட் டைரக்டர் மிலன் இந்த செட்டை வடிவமைத்திருக்கிறார். பாடல்
கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய் இதற்காக
செலவழித்திருக்கிறார்கள். மேலும் அந்த செட்டிலேயே வைத்து சில முக்கியமான
காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment