மூன்று மொழி நடிகையாகி விட்ட ஸ்ருதிஹாசனைக் கண்டு பீதியடைந்த தமன்னா!!!

20th of June 2014
சென்னை:தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். தெலுங்கைப்பொறுத்தவரை, அங்குள்ள முக்கிய ஹீரோக்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கிற படங்களில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிற பட்சத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி அந்த இனனொரு நடிகையை ஓரங்கட்டிவிடுகிறார் ஸ்ருதிஹாசன்.
 
இதனால் ஸ்ருதிஹாசன் இருக்கிற படங்களில் நடிக்க அங்குள்ள முன்னணி நடிகைகளே நடுங்கிப்போயிருக்கிறார்கள். மேலும், எவடு படத்தில் மகேஷ்பாபவுடன் நடித்திருந்தார் ஸ்ருதி. படுகவர்ச்சியாக அவர் நடித்த போட்டோக்கள்கூட இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கின. ஆனபோதும், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறாராம்.
 
ஆனால் அந்த வாய்ப்பு தனக்குத்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்த ஸ்ருதி இப்போது அந்த வாய்ப்பு கைநழுவி விட்டது என்றபோதும அந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு தான் குத்தாட்டம் ஆடுவதாக கூறியிருக்கிறாராம். இதனால் அப்படநாயகி தமன்னாவுக்குகூட மனதளவில் பீதி ஏற்பட்டிருக்கிறதாம்.
 
இதற்கு காரணம், மகேஷ்பாபு இதற்கு முன்பு நடித்த பிசினஸ்மேன் படத்தில் ஸ்வேதா பரத்வாஜ், துகுடு படத்தில் பார்வதி மில்டன் ஆகிய நடிகைகள் அயிட்டம் பாடல்களுக்கு ஆடியிருந்தனர். அவர்கள் போட்ட அதிரடி ஆட்டம் காரணமாக அந்த படங்களில் கதாநாயகிகளுக்கே கிடைக்காத மொத்த பெயரையும் அவர்கள் தட்டிச்சென்று விட்டனர். அதனால். இந்த படத்திலும் தனது எதிரி நடிகையான ஸ்ருதிஹாசன் ஒரே பாடலில் தன்னை ஓரங்கட்டிவிடுவாரோ என்று பீதியில் இருக்கிறாராம் தமன்னா.

Comments