29th of June 2014
சென்னை:ரஜினி கோச்சடையான் படத்தை முடிந்த கையோடு தற்போது லிங்கா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ரஜினி படம் என்றால் நமக்கு என்ன நினைவுக்கு வரும் சொல்லுங்கள்? அட ஆமாமங்க அவர் பேசும் பஞ்சு டயலாக் தான். பூவும் நாறும் எப்படி பிாிக்க முடியாதே அதே போல, ரஜினியும் பஞ்ச் டயலாக் இரண்டையும் பிாிக்க முடியாது. விஷயம் இந்தாங்க.!
நமக்கு ஷாக் ஆன செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. ரஜினி ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அது என்னவென்றால் இனி தான் நடிக்கும் படங்களில் பஞ்ச் டயலாக் பேசப்போவதில்லையாம். இது ரசிர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்ச் டயலாக் பேசுவதை தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஆனால் தற்போது அவரே பஞ்ச் டயலாக் பேசப்போவதில்லை என முடிவு எடுத்திருப்பது திரைபிரபலங்களுக்கும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
ரஜினியின் ரசிகரான சந்தானம் உட்பட பலரும் லிங்கா படப்பிடிப்பின் போது ரஜினியிடம் ‘பஞ்ச் டயலாக் பேசுற ட்ரென்ட்டே அறிமுகப்படுத்துனது நீங்க தான். ஆனால இப்ப நீங்களே பேச மாட்டேன் என்று சொன்னால் எப்படி,? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள். ரசிகர்களாகிய நாங்க உங்ககிட்ட அதிகமா எதிர்பார்ப்பதும் அதைத்தான். மத்தவங்க பேசறது வெறும் டயலாக். நீங்க பேசுனாதான் அது பஞ்ச் டயலாக் தலைவரே,” என்று சொன்னார்களாம். தன் முடிவில் உறுதியாக இருந்த ரஜினி கடைசிவரை பின்வாங்க மறுத்து விட்டாராம்.
Comments
Post a Comment