அஜித்துக்கு போஸ் கொடுக்கும் போட்டோகிராபர்!!!

27th of June 2014
சென்னை:கார் ரேஸ், பைக் ரைடிங் போலவே அஜித்திற்கு பிடித்த இன்னொரு விஷயம் போட்டோகிராபி. வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் போட்டோகிராபியின் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார் அஜித். வெளிப்புற படப்பிடிப்போ அல்லது வெளிநாட்டு டூரோ எதுவானாலும் அஜித்தின் லக்கேஜில் நிச்சயம் இம்போர்டட் கேமரா ஒன்று கூடவே பயணிக்கும்.

வெளிப்புறங்களில் மட்டுமே புகைப்படம் எடுத்துவந்த அஜித், இப்போது இன்டோர் போட்டோகிராபி எனப்படும் உட்புறங்களில் எடுக்கப்படும் போட்டோகிராபியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். இதற்காக இணைய தளத்திலும் இது குறித்த தகவல்களை திரட்டுவதோடு தனக்கு நெருங்கிய புகைப்பட கலைஞர்களிடமும் ஆலோசனைகள் கேட்கிறார் அஜித்.
 
குறிப்பாக உட்புற தளங்களில் படம் எடுக்கும்போது கவனிக்கவேண்டிய லைட்டிங்ஸ், லென்ஸ், ரிப்லெக்டர் உள்ளிட்ட பலவேறு டெக்னிக்குகளை தான் நடிக்கும்போது தன்னுடன் பணியாற்றும் போட்டோகிராபரிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்கிறாராம். இப்போது அவருடைய பேவரைட் ஆளாக மட்டும் இல்லாமல் அஜித் எடுக்கும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் பாக்கியவனாகவும் மாறிவிட்டார் அந்த போட்டோகிராபர்.

Comments