நானும் மம்மூட்டியும் ராசியான ஜோடி லட்சுமி ராய் அலப்பறை: ஹீரோயின்கள் கடுப்பு!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

2nd of June 2014
சென்னை:
மம்மூட்டியை நடிப்பில் ஆதிக்கம் செலுத்தப்போகிறேன் என்றார் லட்சுமிராய். லட்சுமிராய் தமிழில் ‘இரும்பு குதிரை படத்தில் பைக் வீராங்கனையாக நடிக்கிறார். இதையடுத்து ‘ராஜாதி ராஜா என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:மம்மூட்டி ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறேன். குடும்ப பாங்கான வேடமென்றாலும் துணிச்சலான பெண் வேடம். சில காட்சிகளில் நடிப்பில் மம்மூட்டியின் கதாபாத்திரத்தை ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
 
படத்தின் 2ம் பகுதியில் நிறைய சஸ்பென்ஸ் இருக்கும். நாங்கள் இருவரும் ராசியான ஜோடி என்ற பெயர் உண்டு. மல்லுவுட்டில் உள்ள எனது ரசிகர்கள் நிறைய படங்களில் நடிக்காதது பற்றி ஆச்சரியம் தெரிவித்தார்கள். மற்ற மொழிப்படங்களில் பிஸியாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்க முடியவில்லை. தமிழில் இரும்பு குதிரையில் என்னை ஆக்ஷன் ஹீரோயினாக பார்க்கலாம்.இவ்வாறு லட்சுமி ராய் கூறினார்.
 
மம்மூட்டி தனக்கு ராசியான ஜோடி என்று லட்சுமி ராய் சொல்லியிருப்பதால் மல்லுவுட்டில் உள்ள மற்ற ஹீரோயின்கள் கடுப்பாகியுள்ளனர். சவுத் படங்களில் வாய்ப்பு இல்லாததால் மலையாளத்தில் டேரா போட லட்சுமிராய் முயல்வதாக அவர்கள் புகார் கூறுகிறார்கள்.

Comments