அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!!!

5th of June 2014
சென்னை:படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே போகிறது. ஒருபுறம் டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க மற்றொ

எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!
இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே
ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே
அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
பேங் பேங் பேங்!!!

இந்தப் பாடல் வரிகளை கவனிக்கும்போது ‘அஞ்சான்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவில் ஒருவர் மும்பை ‘டான்’ என்பதும், அவரின் பெயர் ‘ராஜு பாய்’ என்பதும் தெரிகிறது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’ வரிசையில் ‘அஞ்சான்’ படமும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சூர்யா ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் டீஸரை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் அனேகமாக ஜூலை மாதம் வெளிவரும்.
ருபுறம் ‘அஞ்சான்’ படத்திற்கான பாடல்களும் சூப்பராக உருவாகிக் கொண்டிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை சமீபத்தில் எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற இருக்கும் ‘அஞ்சான்’ சூர்யாவுக்கான ஓபனிங் பாடலின் சிலவரிகள் இங்கே உங்களுக்காக..

Comments