15th of June 2014
லையாளத்தில் மம்முட்டி-லட்சுமிராய் காம்பினேஷன் ரொம்பவே ஸ்பெஷலானது. ‘அண்ணன் தம்பி’, ‘பருந்து’, ‘சட்டம்பி நாடு’ என இதற்குமுன் இந்த ஜோடி நடித்த மூன்று படமும் சூப்பர்ஹிட்.
அதிலும் மாதத்திற்கு ஒருமுறையாவது சூர்யா டிவியில் தவறாமல் ஒளிபரப்பாகிவிடும் ‘அண்ணன் தம்பி’ படத்தில் லட்சுமிராயின் அழகு வேறோரு பரிமாணத்தில் வெளிப்பட்டிருக்கும்.
அவ்வளவு ஏன் லட்சுமிராய் சேலைகட்டினால் கூட அதில் ஒருவித கவர்ச்சி இருக்கும். இப்போது நான்காவது முறையாக ‘ராஜாதி ராஜா’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி. லண்டனில் இருந்த லட்சுமிராய் நேரடியாக இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி வந்து இறங்கிவிட்டார்.
சமீபத்தில் தான் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிவைத்துக்கொண்ட இவர் “குளுகுளு லண்டனில் இருந்து வெப்பமான பொள்ளாச்சிக்கு வந்தது புதிய அனுபவமாக இருந்தது என்றால் மம்முட்டியுடன் மீண்டும் நடிப்பது அதைவிட மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது” என்கிறார்..
Comments
Post a Comment