விக்ரம் படத்தை தயாரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!!!

24th of June 2014
சென்னை:சில தயாரிப்பாளர்களுடன் இணைந்து, திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, விக்ரம் நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

'கோலிசோடா' படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமடைந்துள்ள ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்ததாக இயக்கி ஒளிப்பதிவு செய்யும் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இப்படத்தை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின், ஏ.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் இப்படத்தை, குறைந்த காலகட்டத்தில் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணிபுரியும் இப்படக்குழுவினர், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்தி முடித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments