கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் சூதுகவ்வும் கருணாகரன்!!!

9th of June 2014
சென்னை::
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'லிங்கா'.
இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் லிங்கா படத்தில் கருணாகரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
 
இவர் ‘சூதுகவ்வும்’, ‘யாமிருக்க பயமே’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருப்பவர். மேலும் அவர் ஐதரபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் வருகிற 19ம் தேதி முதல் கலந்துகொள்கிறார்.
 
தொடர்ந்து 20 நாள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்த கருணாகரன் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Comments