இந்தி திரையுலகில் தனக்கு எதிராக வதந்திகள் பரப்பி வளர விடாமல் தடுக்கின்றனர் நடிகைகள்: தமன்னா பாய்ச்சல்!!!

9th of June 2014
சென்னை::
இந்தி திரையுலகில் தனக்கு எதிராக வதந்திகள் பரப்பி வளர விடாமல் தடுக்கின்றனர் என்று தமன்னா குற்றம் சாட்டி உள்ளார். இந்தியில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சயீப்அலிகான் நடிக்கிறார். ரீடேஷ் தேஷ்முக், பிபாசாபாசு போன்றோரும் நடிக்கின்றனர்.

இந்த படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்கும் திட்டத்தில் தமன்னா இருக்கிறார். ஏற்கனவே அசின் இந்தியில் நடித்து வருகிறார். திரிஷாவும் இந்தி படத்தில் நடித்தார். தற்போது தமன்னாவும் அங்கு போக உள்ளார். ஆனால் தமன்னா இந்திக்கு வந்தது அங்குள்ள நடிகைகளுக்கு பிடிக்க வில்லையாம். தங்கள் வாய்ப்புகளை பறித்து விடுவாரோ என பயப்படுகின்றனர். இதனால் தமன்னாவுக்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றனர். படக்குழுவினரை தமன்னா மதிப்பது இல்லை என்றும் பிபாசாபாசுவுக்கும், தமன்னாவுக்கும் சண்டை என்றும், கிசுகிசுக்களை வெளியிடுகிறார்கள். இதனால் தமன்னா வருத்தத்தில் இருக்கிறார். அவர் கூறியதாவது:–

இந்தி திரையுலகில் என்னை பற்றி தொடர்ந்து வதந்திகள் பரபரப்பப்படுகின்றன. பிபாசாபாசுவுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை. ஆனால் நாங்கள் சண்டை போட்டதாக செய்தி பரப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறவர்கள் யார் என்று எனக்கு தெரியும். இந்தி திரையுலகில் நான் வளரக்கூடாது என்று சிலர் நினைக்கின்றனர். என் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுபோல் வதந்தியை பரப்புகிறார்கள்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Comments