8th of June 2014
சென்னை:விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ‘ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்புகிற கேள்வியை கேட்கலாம்’ என்று சொல்லி, நடிகர் சிம்புவிடம் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா. ‘பாடாத சிம்பு, நிறுத்திடு’ என்றார்.
கோச்சடையான் வெளியான சமயத்தில் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என டுவிட்டரில் போட்டிருந்தார் சிம்பு. அதற்கு நன்றி என அப்போது தெரிவித்திருந்தார் சவுந்தர்யா. அதனை மனதில் கொண்டு தற்போது டிடி கேட்ட கேள்விக்கு சிம்புவை தாக்கும் வண்ணம் அவர் பதிலளித்தார்.
Comments
Post a Comment