தனுஷுடன் சண்டை எல்லாம் இல்லை: என் படங்கள் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி இருக்கணும்: சிவகார்த்திகேயன்!!!
25th of June 2014
சென்னை:சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால், அவர் மீது தனுஷ் பொறாமை கொண்டிருக்கிறார் என்றும், இருவருக்குமிடையே பிரச்சனை என்றும் செய்திகள் வெளிவந்தன.
தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை வாங்குவதை விட சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், இவற்றை கடுமையாக மறுக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
எனக்கும் தனுஷுக்கும் இடையில இருக்கிற நட்பு மாறாம அப்படியேதான் இருக்கு. அவர் என் மேல பொறறாமைப்படறதுக்கு காரணமே இல்லை. என் மேல நம்பிகை வச்சி நான் நல்லா வருவன், அவரை விட மேல வருவன்னு சொன்னதே அவர்தான். அப்படி நடந்தால் அதப் பார்த்து அவர் சந்தோஷம்தான் படுவாரு.
முன்னாடி மாதிரி நாங்க அடிக்கடி சந்திச்சிக்கிறதில்லை. அதுதான் இந்த மாதிரி செய்திலாம் வர்ற காரணமா இருக்கு. என்னோட அடுத்த படத்தைத் தயாரிக்கிறதே அவர்தான். நேர்ல அடிக்கடி பார்த்துக்கறதில்லையே தவிர போன்ல அடிக்கடி பேசிக்கிறோம்,” எனச் சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
ஏம்பா…கிசு கிசு ரைட்டர்ஸ்…அதான் சிவகார்த்திகேயனே சொல்லிட்டாருல்ல…வேற ஏதாச்சும் புதுசா டிரை பண்ணுங்க..
லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
எனக்கு எல்லா தரப்பும் ஆடியன்சும் கிடைச்சிருக்குறது சந்தோஷமா இருக்கு. இளம் பெண்கள் என்னை ஒரு அண்ணனா பார்க்குறாங்க. இளைஞர்கள் தங்களில் ஒருத்தரா பார்க்குறாங்க. தாய்மார்கள் மகனா பார்க்குறாங்க. குழந்தைங்களுக்கு என்னை எப்படி புடிக்குதுன்னே புரியல. எப்படியோ எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறேன்.
அதனால் எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அவுங்க மனசை புரிஞ்சிக்கிட்டேன். மான் கராத்தே படத்துல வில்லன் கால்ல விழுந்து அழும் சீன்ல ஏன் நடிச்சீங்கன்ன உரிமையோட கேட்குறாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துப்பேன். லிப் லாக் முத்தக்காட்சிகள்ல நடிக்கவே மாட்டேன், என் படங்கள் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்கிறார் சிவகார்த்திகேயன்.
Comments
Post a Comment