14th of June 2014
சென்னை:அனிருத்-ப்ரியா ஆனந்த் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் காதலிப்பதும் பின் கழட்டி விடுவதும் சாதாரணம் தான். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் ஒரே பாடலில் உலகப் புகழ்பெற்ற அனிருத் தன் புது காதலியை தேடிப்பிடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, ‘வணக்கம் சென்னை’, ‘180’, ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த் தானாம். எதிர் நீச்சல் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றிய போதே இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாம்.
இதை தொடர்ந்து வணக்கம் சென்னையிலும் இவர் பணியாற்றியதால் இருவருக்குமான நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.இப்போதெல்லாம் இருவரும் அடிக்கடி ஈசிஆரில் தனியாக சந்தித்து வருவதாகவும், மேலும் ப்ரியா ஆனந்த் நடிக்கும் ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அனிருத் சென்று பார்க்கிறாராம். இவர்கள் காதல் லீலைகளால் படக்குழுவுக்கு தான் தலைவலியாக உள்ளதாம்.
ஏற்கெனவே, அனிருத் தன்னை விட வயதில் பெரியவரான ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருப்பதை போன்று புகைப்படங்கள் நெட்டில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment