3rd of June 2014
சென்னை:லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம்
அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும்
நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக
படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க
இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திரதினத்தன்று
வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.
இதுகுறித்து லிங்குசாமி கூறியிருப்பதாவது: பெரும்பகுதி
படப்பிடிப்பு முடிந்து விட்டது. சுதந்திரத்தன்று வெளியிடுவதற்கு ஏற்ற
மாதிரி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் ஒரு
சில வசன காட்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வருகிற 8ந்
தேதி முதல் கோவாவில் பாடல் படமாகிறது என்றார்.
படத்திற்கான
டிரைலரை புதுமுமையான முறையில் வெளியிட இருக்கிறார்கள். இந்த மாத
இறுதிக்குள் டிரைலர் வெளியிடப்பட்டுவிடும். ஜூலையில் யுவன் சங்கர் ராஜாவின்
இசையில் பாடல்கள் வெளியிடப்படும். கோவாவில் எடுக்கப்படும் பாடல்
காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆட இருக்கிறார்கள். இது ஒரு
குத்துப்பாட்டு. அவர்களுடன் 200 நடன கலைஞர்களும் ஆடுகிறார்கள். இதற்காக
பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருகிற 15ந் தேதிக்குள் படப்பிடிப்பு
தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்து விடும்" என யூனிட் வட்டார தகவல்கள்
தெரிவிக்கிறது.
Comments
Post a Comment