ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்!!!

10th of June 2014
சென்னை:சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரூ ஆகிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை வந்து சந்தித்து விட்டு சென்றனர்.

இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் சந்தித்துவிட்டு சென்றனர்.

அப்போது நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை அறிந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய். கூடவே நெல்லையை சேர்ந்த ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
 
மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருகிறது. இதனை கொண்டாடுவது தொடர்பாக ரசிகர்கள், விஜய்யை சந்தித்து கலந்து ஆலோசித்து உள்ளனர்.

Comments