2nd of June 2014
சென்னை:இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வாலு திரைப்படம் ஒரு வழியாக முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
சென்னை:இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வாலு திரைப்படம் ஒரு வழியாக முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் விஜயசந்தர், அடுத்து வித்தியாசமான
ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு கன்னி ராசி
என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக
ஜெய் நடிக்கிறார்.
ஆனால் நாயகி ஒருவரல்ல. ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, த்ரிஷா, ஆன்ட்ரியா,
லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட 9 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம்.
மேலும் படத்தில் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று
கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனத் தெரிகிறது.
ஒரு படத்தில் ஒரு நாயகியை சமாளிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில்
எப்படி 9 நாயகிகள் என்றுதான் கேட்கிறீர்கள். பொறுத்திருந்துதான்
பார்ப்போம். ஏற்கெனவே, பாண்டியராஜன் இயக்கத்தில், பிரபு கதாநாயகனாக நடித்து
‘கன்னி ராசி’ என்ற பெயரில் ஒரு படம் 1985-ல் வெளிவந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment