கத்தி டீஸர் - ஏம்பா இதுவும் ஒரிஜினல் இல்லையா?!!!

25th of June 2014
சென்னை:விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. பத்திரிகை டிஸைனில் உள்ள விஜய் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் டீஸரையும் அதேபோல்தான் வடிவமைத்துள்ளனர்.
அதாவது சென்னை நகரத்தின் அனைத்து பில்டிங்குகள், சாலைகள் பத்திரிகை டிஸைனில் இருப்பதாக டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தை அப்படியே அச்சு அசலாக கொண்டுள்ளது. அதில் அமெரிக்கா, சுதந்திரதேவி சிலை என்றால் இதில் சென்னை, எல்ஐசி பில்டிங். 
 
விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இப்படி சர்ச்சையில் மாட்டுவது புதிதல்ல. துப்பாக்கி ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் சுருட்டு பிடிப்பது போல் படம் வெளியிட்டது எதிர்ப்புக்குள்ளாகி, அந்த‌க் காட்சி படத்திலேயே இல்லை, இது சும்மா விளம்பரத்துக்கு என்று விளக்கமளிக்க வேண்டி வந்தது. கௌதம் விஜய்யை வைத்து இயக்குவதாகச் சொல்லப்பட்ட யோஹன் - அத்தியாயம் ஒன்று படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஹாலிவுட் படத்தின் டிஸைன் என சர்ச்சைக்குள்ளானது. இப்போது கத்தி டீஸர்.
துப்பாக்கி பர்ஸ்ட் லுக் சர்ச்சைக்குள்ளானது... படம் ஹிட். கத்தியும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படம் ஹிட்டாகுமா?

Comments