2nd of June 2014
சென்னை:பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர், கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’, சிம்புவுடன் ’ஒஸ்தி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சென்னை:பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர், கமல்ஹாசனுடன் ‘தசாவதாரம்’, சிம்புவுடன் ’ஒஸ்தி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கே.சி.பொக்காடிய இயக்கும் இயக்கும் இப்படத்தில் மல்லிகா ஷெராவத் பன்வாரி தேவியின் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருடன் ஓம்புரி, நஸ்ருதீன் ஷா, அனுபம்கேர், ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த பன்வாரி தேவி செக்ஸ் ஊழலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மும்பை நகரெங்கும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் அந்த போஸ்டர்களில் மல்லிகா ஷெராவத் கையில் சிடியுடன் மூவர்ண கொடி நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து, ‘விஐபி’க்கள் பயணம் செய்யும் சிவப்பு விளக்கு பொருத்திய கார் மீது உட்கார்ந்திருப்பது போன்று கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அவருக்கு பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் உள்ளது. இதை தொடர்ந்து அவர் இந்திய தேசிய கொடியையும், ராஜஸ்தான் சட்டமன்றத்தையும் அவமதித்து விட்டார் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது, ‘‘ஜோத்பூரில் நடந்த அந்த சோக சம்பவத்தை பின்னணியாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஆனால் இப்படத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலோ, ஏதாவது அரசியல் கட்சியை, அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கும் விதமாகவோ எந்த காட்சிகளும் இருக்காது’’ என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment