14th of June 2014
சென்னை:பசங்க' படத்துல சின்னப் பசங்க டீச்சரா விமலை அழகா சண்டை போட்டு
காதலிச்சாங்களே சோபிக்கண்ணு'….அவங்கதான் வேகா. 'சரோஜா' படத்துல சின்ன
கேரக்டர்ல அறிமுகமானாலும், வேகான்னா யாருன்னு தெரிய வச்சது 'பசங்க'
படம்தான். அதுக்கப்புறமா 'வானம்' படத்துல பரத்துக்கு ஜோடியா நடிச்ச வேகாவை
அப்புறமா யாருமே கண்டுக்கலை.
அப்புறம்
தெலுங்குக்குப் போயி 'ஹவுஸ்புல்', ஹிந்தில 'சிட்டகாங்' ஆகிய படங்கள்ல
நடிச்ச வேகா இப்ப 'அமித் சானி கி லிஸ்ட்'ங்கற இந்திப் படத்துல ஹீரோயினா
நடிச்சிக்கிட்டிருக்காங்க. இந்தப் படம் அடுத்த மாசம் ரிலீஸ் ஆக இருக்கு.
நிறைய விளம்பரப் படங்கள்ல நடிச்சிருந்தாலும் வேகாவுக்கு பெருசா இன்னும்
எந்த வாய்ப்பும் அமையலை. அதனால, திரும்பவும் தமிழ் சினிமா பக்கம் அவங்க
கவனத்தை திருப்பியிருக்காங்களாம்.
'பசங்க' படத்துல நடிச்சதுக்கப்புறமே தொடர்ந்து நல்ல படங்களா தேர்வு செஞ்சி நடிக்காம விட்டுட்டமேன்னு வருத்தப்படறாங்களாம். அதனால, மீண்டும் தமிழ் சினிமால நடிக்க ரெடியா இருக்கிறதா சொல்லியிருக்காங்க. 'சோபிக்கண்ணு' மாதிரியே அழகான கேரக்டர்லாம் வந்தால் கண்டிப்பா தமிழ்லயும் நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்காங்களாம். அடுத்த மாசம் வரப் போற இந்திப் படத்துக்கப்புறமா திரையுலகம் தன்னையும் திரும்பிப் பார்க்கும்னு நம்பிக்கையோட இருக்காங்களாம்.
Comments
Post a Comment