அனுஷ்காவும் த்ரிஷாவும் சந்திக்க மாட்டாங்களாமே.. அப்படியா..?!!!

9th of June 2014
சென்னை::
கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் தற்போது நடித்துவரும் படத்தில் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷாவுக்கு அஜித்துடன் இது நான்காவது படம்.
 
இந்தப்படத்தில் அனுஷ்கா ஏற்கனவே அஜித்துடன் இணைந்து நடித்துவருகிறார். கதைப்படி அனுஷ்காவும் த்ரிஷாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவே மாட்டார்களாம். த்ரிஷாவின் காட்சிகள் ஃப்ளாஸ்பேக்கில் தான் வருகின்றனவாம்.
 
இப்போது அஜித், அனுஷ்காவுடன் கௌதம் மேனன் டீம் மலேசியாவுக்கு கிளம்பி போய்விட்டது. அங்கே ஆக்ஷன் காட்சி உட்பட சில முக்கியமான காட்சிகளை பத்து நாட்கள் தங்கி படமாக்க இருக்கிறார்களாம். அனேகமாக நாளையில் இருந்து மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது

Comments