14th of June 2014
சென்னை:இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. இவர் தனது கணவரான
விஜய் ஆண்டனியை சினிமாவில் பெரிய ஹீரோவாக்க திரைக்குப்பின்னால் பெரிய
தூணாக நின்று கொண்டிருக்கிறார். இதை விஜய் ஆண்டனியே சில மேடைகளில்
மனைவியைப்பற்றி பெருமையாக சொல்லி வருகிறார்.
இந்த
நிலையில், புரொடக்ட் யுவர் மாம் என்றொரு நிறுவனத்தில் விளம்பர தூதுவராக
தற்போது நியமிக்கப்பட்டுள்ளார் பாத்திமா விஜய் ஆண்டனி. பெரும்பாலும்
விளம்பர தூதுவர்காளாக நியமக்கப்படும் நடிகர், நடிகைகள் வாய்
வார்த்தைகளால்தான் விழிப்புணர்வு பிரசாரம செய்வாரக்ள். ஆனால், இவரோ, தனது
தலையில் மொட்டை அடித்து கேன்சர் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும், கேன்சர் என்ற கொடியை நோயை எப்படி விரட்டியடிப்பது. அந்த நோய்க்கு ஆளானவர்கள் எத்தகைய உறுதியான மனநிலையை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் வகையில் வார்த்தைகளால் பிரசாரம் செய்கிறாராம் பாத்திமா விஜய் ஆண்டனி. அவரது இந்த பிரசாரத்துக்கு அவரை தூதுவராக நியமித்துள்ள நிறுவனம் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Comments
Post a Comment