28th of June 2014
சென்னை:ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளில் அவுட்டோர்கள் மற்றும் கூட்ட
நெரிசலான பகுதிகளுக்கு செல்லும்போது அடிக்கடி ரசிகர்களின்
அன்புத்தொல்லையில் சிக்கிக்கொள்வதுண்டு. அந்த வகையில், கடந்த சில
தினங்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள ஒரு
தியேட்டரில் ஆங்கில படம் பார்க்க சென்றாராம் ஹன்சிகா.
அப்போது,
அவர் தனது முகத்தை துணியால் மூடியபடி சென்றபோதும், அங்கு நின்று
கொண்டிருந்த இளவட்ட ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு
கூச்சலிட்டார்களாம். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நின்று கொண்டிருநத
இளவட்ட ரசிகர்களும் ஓடிவந்து ஹன்சிகாவை முற்றுகையிட்டு ஆட்டோகிராப்
கேட்டுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் செல்போனில் அவருடன் நின்று போட்டோ
எடுத்துள்ளனர்.
இந்த செய்தி, அந்த வணிகவளாகத்தில் உள்ள ஏரியா முழுக்க பரவியதால், ஒரு பெரும்கூட்டமோ ஹன்சிகாவை மொய்த்து விட்டார்களாம். அப்போது சில குறும்புக்கார ரசிகர்கள், கூட்டத்தை சாதகமாக்கிக்கொண்டு ஹன்சிகாவின் உடலில் சீண்டியிருக்கிறார்கள். இதனால் நிலைமை மோசமாகிக்கொண்டு வருவதை அறிந்த அங்கிருந்த பாதுகாவலர்கள் ஹன்சிகாவை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இருப்பினும், அவர் காரில் ஏறி செல்வதை வரை பின்னாடியே துரத்தியிருக்கிறது ரசிகர் படை.
Comments
Post a Comment