19th of June 2014
சென்னை:கமல்ஹாசன் ஜோடியாக மீண்டும் நடிக்க வருகிறார் கவுதமி.‘தேவர்மகன், ‘அபூர்வ சகோதரர்கள், ‘குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கவுதமி. கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ‘சாசனம் என்ற படத்தில் நடித்தார். இதன்பிறகு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையில் கமலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு கமல் உறுதுணையாக இருந்ததுடன் தகுந்த சிகிச்சை அளித்து நோயிலிருந்து அவரை மீட்டார். தற்போது கமலின் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வரும் கவுதமி.
மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.மலையாளத்தில் மம்முட்டி, மீனா நடித்த ‘திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கவுதமி நடிக்க உள்ளார். ‘உத்தமவில்லன் பட ஷூட்டிங்கிலும், ‘விஸ்வரூபம் 2 பாகம் இறுதிகட்ட பணியிலும் பிஸியாக இருக்கிறார் கமல். இப்படங்கள் முடிந்தபிறகு ‘திரிஷ்யம் பட ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்க உள்ளார்.
Comments
Post a Comment