விஜய்வசந்தின் ‘சிகண்டி’!!!

25th of June 2014
சென்னை:சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'என்னமோ நடக்குது' படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் பி.ராஜபாண்டி இயக்கும் படத்திற்கு 'சிகண்டி' என்ற தலைப்பை வைத்திருக்கிறார். 'என்னமோ நடக்குது' படத்தை தயாரித்த ‘டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ்’ பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
 
இரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் ‘என்னமோ நடக்குது’ படத்தின் நாயகன் விஜய் வசந்த் முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர், நடிகைகள் பலரும் நடிக்க, இப்படத்தை எழுதி இயக்குகிறார் பி.ராஜபாண்டி.
 
படத்தை பற்றி இயக்குனர் கூறியபோது, “என்னமோ நடக்குது’ படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஆக்‌ஷன் படம்.நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இப்படம் தயாராகிறது. சமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நாம் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக்காட்டும் படமே ‘சிகண்டி’ என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.

சிகண்டி என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு கேரக்டர். ஆண் உருவம் கொண்ட பெண். பீஷ்மரை வீழ்த்த நினைக்கும் அர்ச்சுனன், சிகண்டி மூலம் ஏமாற்றிக்கொல்வார் என்கிறது காப்பியம்.

Comments