சித்தார்த்.அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அதற்கு கடுமையான பதிலடி கொடுப்பதும் சித்தார்த்துக்கு வாடிக்கையாகிவிட்டது!!!

13th of June 2014
சென்னை:எனக்கு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி என்று ஷாக் கொடுத்திருக்கிறார்
 
சித்தார்த்.அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அதற்கு கடுமையான பதிலடி கொடுப்பதும் சித்தார்த்துக்கு வாடிக்கையாகிவிட்டது.
 
ஸ்ருதி ஹாசனுடன் இணைத்து பேசப்பட்ட சித்தார்த் தற்போது சமந்தாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில் இணைய தள பக்கங்களில் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டீன் ஏஜ் வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மறுத்திருந்தார் சித்தார்த்.ஆனாலும் கோபம் தீராமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில்..
எனக்கு மகன் இருக்கிறான் என்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதில்,‘ஆம் எனக்கு மகன் இருக்கிறான். ஆனால் அவனுக்கு நான்கு கால் ஒரு வால் இருக்கிறது. அவன் பெயர் மோக்லி. 10 வயது ஆகிறது. குடிசை பகுதி ஒன்றின் அருகில் அவனை கண்டெடுத்தேன். அவனை நான் காப்பாற்றினேன். அன்பால் அவன் என்னை கட்டிப்போட்டிருக்கிறான்.
 
உலகத்திலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் அவன் என்று குறிப்பிட்டிருப்பதுடன் அருகில் தான் வளர்க்கும் நாய் படத்தை வெளியிட்டு இவன்தான் அந்த மோக்லி என கூறி இருக்கிறார்.

Comments