26th of June 2014
சென்னை:சமீபத்தில் கோடைமழை படப்பிடிப்பில் ஒரு காட்சியில் மு.களஞ்சியம் நடிகை பிரியங்காவை அறைவதுபோல காட்சியில் நிஜத்தில் அறைந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கிய நடிகை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தற்செயலாக நடந்த விசயம்தான் என்று படப்பிடிப்பு குழுவினரால் கூறப்பட்டுவந்த்தது. ஆனால் இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை வாய்திறக்காமல் இருந்தார். தற்போது அவர் மனம் திறந்து தன்னை தாக்கியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியபோது,
கடந்த 17ம் தேதி சங்கரன்கோவிலில் ஷூட்டிங்னு 16ம் தேதி இரவுதான் சொன்னாங்க. சொன்னதுமட்டுமல்லாம உடனடியாக பேருந்தில் கிளம்பிவரவும் சொன்னார்கள்.கார் கொடுத்தால் விரைவாக வந்துடுவேன் என்றேன். அதற்கு அவர்கள் நீங்களே எடுத்துட்டு வந்துடுங்க நாங்க டோல்கேட் காசும், டீசல் பணமும் தர்றோம்னு உறுதி அளிச்சாங்க. திடீருனு கூப்பிட்ட்தால் அவசர அவசரமாக கிளம்பியும் காலை 8 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு போய்ச் சேர முடிந்தது.
ஆனால் அதற்குள் சூட்டிங் ஆரம்பிச்சிருந்தாங்க. நான் லேட்டா போனதுக்கு காரணம் முழுக்க அவர்கள்தான் எனறாலும், இயக்குனர் கதிரவன் என்னை எல்லோர் முன்னிலையிலும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதையும் பொறுத்துக் கொண்டு நடித்தேன். சூட்டிங் ஸ்பாட்டுக்கு போனபிறகுதான் இயக்குனர் களஞ்சியம் எனக்கு அண்ணனாக நடிக்க இருப்பதாக சொன்னாங்க. அன்றைய தினம் என்ன ஷாட் எடுக்க போறோம்னு எதுவும் எங்கிட்ட சொல்லவே இல்ல. ஆரம்பத்தில் என்கிட்ட சொன்ன கதையில அண்ணன் கன்னத்துல அடிக்கிற சீனே கிடையாது. சீன் ஒத்திகை பார்த்தபோது திடீர்னு களஞ்சியம் என் கன்னத்துல அடித்தார். கன்னத்துல அடிக்கிறதா என்கிட்ட யாருமே சொல்லையேன்னு கேட்டேன். சீன் யதார்த்தமா இருக்கணுங்றதுக்காக முன்கூட்டி சொல்வில்லை என்றார்கள்.சரி என்று பொறுத்துக்கொண்டேன்
அப்புறம் ஷாட் போனபோது ஓங்கி பலமாக கன்னத்துல அடிச்சார். அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னே தெரியல. நான் ஆஸ்பத்திரியில இருந்தேன். காதுல டொய்ங்னு வர்ற சத்தம் தவிர வேறெதும் கேட்கவில்லை. பரிதாப்பத்துகாகவது மருத்துவமனையிலகூட யாரும் வந்து பார்க்கவில்லை. சென்னை திரும்புறதுக்கும் ஏற்பாடு பண்ணல. கேட்டதுக்கு 108 ஆம்புலன்சுல போங்கன்னு சொன்னாங்க.
கார்கேட்டன் என்ற ஒரே காரணத்துக்காக அதை மனசுல வச்சிக்கிட்டு என்னை அடிச்சிட்டாங்க. நான் என்னோட கேரியருக்கா இதை இப்படியே விட்டுரலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா தவறான செய்திகளை பரப்பி என் கேரியரையே கெடுக்க பார்க்குறப்போ இதை சொல்லாம இருக்க முடியவில்லை என்கிறார் பிரியங்கா.
அட பெரிய நடிகைகள் கேட்டால் பன்னீரையே குளிப்பதற்கு ஏற்பாடும் செய்யும் தயாரிப்பாளர்கள் புதிய நடிகைகள் என்றால் அர்ப்பமாத்தான் பார்ப்பார்கள் போல!!!
Comments
Post a Comment