23rd of June 2014
சென்னை:சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவுக்கு அஜீத் வர மறுத்ததால், அக்கட்சியைச்சேர்ந்தவர்கள் அவரை மிரட்டினார்களாம். அதையடுத்து விழாவுக்கு வந்த அஜீத், அதை விழா மேடையிலேயே தெரிவித்தார்.
அஜீத்தின் இந்த துணிச்சலை ரஜினி உள்ளிட்ட சிலர் கைதட்டி வரவேற்றனர்.
அதனால், பின்னர் அரசியல்வாதிகள் தேவையில்லாமல் தன்னை வம்புக்கு இழுக்கக்கூடும் என்றுதான் இப்போதுவரை அரசியல் மேடைகள் மட்டுமின்றி, சினிமா மேடைகளிலும் தலைகாட்ட மறுத்து வருகிறாராம் அஜீத்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தான் தயாரிக்கும் ஒரு படத்தில் அஜீத்தை நடிக்க அழைத்தபோதுகூட அவர் அரசியல் கட்சியில் இருக்கிறார் என்பதினால்தான் அதற்கு பதிலே சொல்லாமல் இழுத்தடித்து வந்திருக்கிறார் அஜீத்.
ஆனால், சமீபத்தில் குஷ்பு, திமுகவில் இருந்து விலகி விட்ட பிறகு, ஒருநாள் அஜீத்துக்கு போன் போட்டு, எனது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் நான் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பற்றி ஒரு பதிலும் சொல்லவில்லையே என்று கேட்டதற்கு, கைவசம் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் அஜீத்.
Comments
Post a Comment