8th of June 2014
சென்னை:என் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்த அஞ்சலி தான் ஒப்புக்கொண்டது போல இன்னும் 20 நாட்கள் நடித்திருந்தால் எனது ‘ஊர்சுற்றி புராணம்’ படம் முடிந்திருக்கும், நானும் கோடி ரூபாய் அளவுக்கு கடன்காரன் ஆகியிருக்க வேண்டியதில்லை.. இன்று ஃபைனான்சியர்களுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் அதிக அளவில் வட்டிகட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது” என்கிறார் மு.களஞ்சியம்
இதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர் நயன்தாராவை உதாரணம் காட்டுகிறார். சிம்பு-நயன்தாரா இருவரிடையேயுள்ள கருத்து வேறுபாடு அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அதையெல்லாம் அவர் ஒதுக்கிவைத்துவிட்டு மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் என்றால் கதைக்கும் தான் சார்ந்திருக்கும் தொழிலுக்கும் கொடுக்கின்ற மரியாதை தான்.
அந்த நல்ல விஷயத்தை நயன்தாராவிடமிருந்து அஞ்சலி கற்றுக்கொள்ள முயற்சி செய்யட்டும். எனக்கு இல்லாவிட்டாலும் என்னுடைய படத்தின் ஸ்கிரிப்ட்டுக்காவது மரியாதை கொடுக்கட்டும்.” என்கிற இயக்குனர் மு.களஞ்சியத்தின் வாத்த்திலும் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.
Comments
Post a Comment