20th of June 2014
சென்னை:வடிவேலு பீக்கில் இருந்தபோது தனக்கு என்று சில துணை நடிகர்களை
வைத்திருந்தார். தான் நடிக்கும் காமெடி காட்சிகளில் சின்னச் சின்ன
வேடங்களில் நடிப்பதற்கென்றே அவர்களை தயார் செய்து வைத்திருந்த வடிவேலு,
தினமும் அத்தனை பேரையும் தன் அலுவலகத்துக்கு வரச்சொல்வார்.
படப்பிடிப்பு
இருக்கிறதோ இல்லையோ..அவரது குழுவில் உள்ள சுமார் 10 பேர் தினமும்
வடிவேலுவின் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். அவர்களை உள்ளே அழைக்கவும்
மாட்டார். தெருவிலேயே மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். இப்படி
காத்திருந்து வெறுத்துப்போய் அடுத்த நாள் வராமல் இருந்தால் அவர்களுக்கு
சான்ஸ் கொடுக்க மாட்டார்.
வடிவேலு நடத்தி வந்த இந்த மினி நடிகர் சங்க வேலையை தற்போது சந்தானமும் செய்து வருகிறார். அவருடன் நடிப்பதற்கென்று சிலரை தேர்வு செய்து வைத்திருக்கிறார். அவர்கள் எல்லாம் தினமும் சந்தானத்தின் அலுவலகத்துக்கு வந்து காத்திருக்கின்றனர். அடுத்த நாள் என்ன படத்தின் படப்பிடிப்பு? என்ன காட்சி என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு காத்திருக்கும் துணை நடிகர்களுக்கு
புரோகிராம் சொல்கிறார்கள். வடிவேலுவுக்கும் சந்தானத்துக்கும் உள்ள வித்தியாசம் துணை நடிகர்களை சந்தானம் தெருவில் நிற்க வைப்பதில்லை. அலுவலகத்திலேயே ஏசியில் இருக்க வைக்கிறார்.
Comments
Post a Comment