சாமியாட்டம் என்றொரு படத்தை தயாரித்து நடிக்கப்போவதாக புதிய பரபரப்பை கூட்டியுள்ளார் ஸ்ரீகாந்த்!!!

16th of June 2014
சென்னை:ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பிறகு மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எதிரி எண் 9 என்ற படம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அப்படமும் பாதி படத்தோடு கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த படத்தை ரொம்ப நம்பியிருந்த ஸ்ரீகாந்த், அப்பட நாயகி பூனம் பாஜ்வா இருவருக்கும் பலத்த ஏமாற்றமாக அமைந்தது.
 
இதனால் அதையடுத்து, நம்பியார் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார் ஸ்ரீகாந்த். தனக்கு மார்க்கெட் மந்தமாக இருப்பதால், அப்படத்தில் டைட்டில் ரோலில் சந்தானத்தை நடிக்க வைத்தார். சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் எப்படி சந்தானமே கதையை நகர்த்தி சென்றாரோ அதேபோல், இப்படத்திலும் சந்தானம்தான் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்.
 
அதோடு, படத்தை தனது சக்திக்கு மீறி செலவு செய்து படப்பிடிப்பு நடத்தினார் ஸ்ரீகாந்த். ஆனால், படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆனபோதும் இன்னும் விற்பனையாகவில்லை. சந்தானத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதும் படம் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகாததால் விநியோகஸ்தர்களை இறுக்கிப்பிடித்து பேசிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
 
இப்படியாக சில மாதங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த், இப்படியே விட்டால் படத்திற்கான மவுசு குறைந்து போகும் என்பதால், தனது பேனரில் அடுத்தகட்டமாக சாமியாட்டம் என்றொரு படத்தை தயாரித்து நடிக்கப்போவதாக புதிய பரபரப்பை கூட்டியுள்ளார் ஸ்ரீகாந்த். அதோடு, அப்படத்தில் லோக்கல் நடிகைகளை நடிக்க வைக்காமல் பாலிவுட்டில் இருந்து ஒரு பிரபல நடிகையை தனக்கு ஜோடியாக்கப்போவதாகவும் அறிவித்திருககிறார்.

Comments