விஷயம் வெளிய தெரியக்கூடாதாம் ; நாசூக்கா செய்யணுமாம்

25th of June 2014
சென்னை:படத்துக்கு எப்படியெல்லாம் டைட்டில் வச்சு ரசிகர்களை கவருவதற்கு ஐடியா பண்றாங்கன்னு சமீபகாலமா வர்ற படங்கள்ல பாத்துக்கிட்டுதான் வர்றோம்.. அப்படித்தான் இப்ப ஒரு படத்துக்கு ‘விஷயம் வெளிய தெரியக்கூடாது’ன்னு டைட்டில் வச்சுருக்காங்க. இது பத்தாதுன்னு ‘நாசூக்கா செய்யணும்’ அப்படிங்கிற சப் டைட்டில் வேற.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் ஒரு பாடலும் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் ஏ.ராகவேந்திரா.  (இன்னொரு டி.ஆரா வருவாரோ?). ஓபன் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக கணேசன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தோட ட்ரைலர் மற்றும் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
 
இந்தப்படத்தின் ஐந்து ஹீரோக்களாக சென்ராயன், ஆர்யன்(பான்பராக் ரவி), நாடோடிகள் ரங்கன்( சசிகுமார்கிட்ட க்ளைமாக்ஸ்ல செம மிதி வாங்குவார்ல அவர்தான்), மூடர்கூடம் குபேரன், மாடலிங் ஆர்டிஸ்ட் கலீல் ஆகியோர் நடிச்சிருக்காங்க.

படத்தோட இணை தயாரிப்பாளரான அருணாச்சலம் இந்தப்படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். நேற்று விழாவிற்கு நிறைய திரையுலக பிரபலங்களை அழைத்திருந்தும் ஒருவர் கூட வரவில்லையென்றும். ஏன் படத்தில் நடித்த சில நடிகர்களே வரவில்லை என்றும் மேடையிலேயே வருத்தப்பட்டார் இயக்குனர் ராகவேந்திரா.

Comments