நான் நடிச்சாலே ஹிட்தான் அதனால் எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள்: சொடக் போட்டுக் கேட்கிறாராம் லட்சுமிமேனன்!!!
23rd of June 2014
சென்னை:பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் கேரளத்து நடிகை லட்சுமிமேனன். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்த பெண் என்றாலும், நல்ல மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்தார். அவரது ஒவ்வொரு அசைவுகளும் அற்புதமாக இருப்பதாக பிரபுசாலமன் மற்றவர்களிடம் சொன்ன விசயம், சசிகுமாரின் காதுகளையும் எட்டியிருக்கிறது.
அதனால், அப்போது தான் நடிக்கயிருந்த சுந்தரபாண்டியன் படத்துக்கும் லட்சுமிமேனனை புக் பண்ணினார். அந்த படத்தில் அவரது பர்பாமென்ஸ் பேசும்படியாக இருந்ததால் தனது அடுத்த படமான குட்டிப்புலியிலும் அவரையே நடிக்க வைத்தார் சசிகுமார். அதையடுத்து, விஷாலுடன் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், விமலுடன் மஞ்சப்பை என பல படங்கள் லட்சுமிமேனன் நடிப்பில் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. அதனால் அடுத்தபடியாக லட்சுமிமேன்ன நடிப்பில் வெளியாகயிருக்கும் ஜிகர்தண்டா, வசந்தகுமாரன், சிப்பாய் போன்ற படங்கள் ஹிட்டிக்கும் என்று அப்படக்குழுவினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால், லட்சுமிமேனன் நடித்தாலே அந்த படம் எந்த காரணம் கொண்டு தயாரிப்பாளர்களின் கையை கடிக்காது என்பது கோலிவுட்டில் செண்டிமென்டாகி விட்டது.
அதனால் தற்போது தனது தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் லட்சுமிமேனன், தனது கோலிவுட் செண்டிமென்டை அங்குள்ள சினிமாக்காரர்களிடம் சொல்லி மார்தட்டி வருகிறாராம். அதோடு, நான் நடிச்சாலே ஹிட்தான். அதனால் எனக்கான சம்பளத்தை கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுங்கள் என்று சொடக் போட்டுக் கேட்கிறாராம் லட்சுமிமேனன்.
Comments
Post a Comment