லிங்குசாமிக்கே தன் அடுத்த படத்தையும் இயக்குகிறார் பாலாஜி சக்திவேல்!!!

9th of June 2014
சென்னை::ஷங்கர் தயாரிப்பில் இயக்கிய காதல் படம் தவிர பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியடையவில்லை. அதே சமயம், அவை மிகச்சிறந்த படங்கள் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. இப்படங்கள் பாராட்டைக்குவித்தது மட்டுமல்ல, வழக்கு எண் 18/9 பாலாஜி சக்திவேலுவுக்கு தேசியவிருதையும் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தை பாலாஜி சக்திவேலின் நண்பரான லிங்குசாமி தயாரித்திருந்தார்.
 
வழக்கு எண் 18/9 படத்தைத் தயாரித்த லிங்குசாமிக்கே தன் அடுத்த படத்தையும் இயக்குகிறார் பாலாஜி சக்திவேல். இந்தப் படத்தக்கு ரா ரா ரா ராஜசேகர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதென்ன ரா ரா ரா ராஜசேகர்? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே? இப்படத்தின் கதாநாயகனுக்கு திக்குவாய். அதை பிரதிபலிக்கும் விதத்திலேயே இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இப்படத்தின் கதாநாயகன் படம் முழுக்க திக்கிதிக்கியே பேசுவாராம். திக்குவாய் பிரச்சனை உள்ள ஒருவன் இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்தான் - ரா ரா ரா ராஜசேகர் படத்தின் கதையாம்.

Comments