27th of June 2014
சென்னை:துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும் ‘கத்தி’ படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் பற்றி முதன் முறையாக பத்திரிகை பேட்டி ஒன்றில் படத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

கத்தி’ படத்துல விஜய் சாருக்கு இரண்டு கேரக்டர்கள், ஒருத்தர் கதிரேசன், இன்னொருத்தர் ஜீவானந்தம். ஆனா, இவங்க இரண்டு பேரும் அப்பா – மகன் கிடையாது, இந்த படமும் கேங்ஸ்டர் பத்தின கதை கிடையாது. சென்னையில தொடங்கி சென்னையிலயே முடியற கதை. இதுக்கு மேல படம் பத்தி பேசினால், இன்னும் நிறையக் கதைகள் கிளப்பிடுவாங்க,” எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
துப்பாக்கி’ படத்துக்கு அடுத்ததா படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி, கண்டிப்பா உங்க கிட்ட கதை சொல்லிடுவேன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். கதையெல்லாம் சொல்ல வேணாம், இப்பவே கமிட் பண்ணிக்கலாம்னு அவர் சொன்னார். இல்லை சார், என்ன படம் பண்றோம்னு உங்களுக்கும் தெரியம்னு சொல்லிட்டு, ‘கத்தி’ படத்தோட மொத்த கதையையும் சொன்னேன். அவர் சொன்ன ஒரு மெசேஜ்..‘சூப்பர்ணா’…‘துப்பாக்கி’ படத்துக்குக் கூட அவர் இப்படிச் சொல்லலை. ஆனால், ‘கத்தி’ படம் விஜய் சார் இதுவரை பண்ணாத ஒரு வித்தியாசமான முயற்சி என்கிறார் முருகதாஸ்
Comments
Post a Comment