வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன்!!!

8th of June 2014
சென்னை:சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

நயன்தாரா இதற்கு முன் சூர்யா ஜோடியாக 'ஆதவன்' படத்தில் நடித்துள்ளார். அநேகமாக, நயன்தாரா படத்திற்காக உறுதி செய்யப்பட்டு விட்டார் என்றே சொல்கிறார்கள். அதே சமயம் இரண்டாவது கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசனை கேட்டிருக்கிறார்கள். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே, தற்போது 'ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வரும் 'மதராசபட்டிணம்' அறிமுக நாயகி எமி ஜாக்சனிடம் பேசி வருகிறார்களாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

இந்த படம் பேய் கதை என்றும் சொல்லப்படுகிறது. சூர்யா படத்தல் பேயாகவும் நடிக்கிறாராம். அதே சமயம் பயமுறுத்தும்படியான பேயாக இல்லாமல் நகைச்சுவைக் கதாபாத்திரமாகவே அந்த பேய் இருக்கும் என்று சொல்கிறார்கள். சூர்யா, இதுவரை முழு நீள நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. வழக்கமான ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும் என்று நினைத்ததாலேயே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள்.

எப்படியோ, 'பிரியாணி' படம் மாதிரி லேட்டா ரிலீஸ் பண்ணாம இருந்தாங்கன்னா அதுவே போதும் என்கிறார்கள், இருவரையும் பற்றித் தெரிந்தவர்கள்.

Comments