ஹேப்பி பர்த்டே நகுல்!!!

15th of June 2014
சென்னை:ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் தான் நகுல்.. நடிகை தேவயானியின் தம்பி என்பதைவிட, அந்தப்படம் தான் இன்றும் அவரை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது.
 
‘பாய்ஸ்’ படத்தில் பப்ளிமாஸ் பையனாக காட்சியளித்த நகுல் தான் ஒரு கதாநாயகன் ஆகியே தீரவேண்டும் என்கிற லட்சியத்தோடு தனது தன்னம்பிக்கையை தளரவிடாமல் விடாமுயற்சியால் தன் தோற்றத்தை மாற்றி அழகுப்பையனாக மாறியதை திரையுலகமே வியந்து பார்த்தது.
நகுல் முதன் முதலாக ஹீரோவாக நடித்த ‘காதலில் விழுந்தேன்’ படம் ஹிட்டாக தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம் என தனது இருப்பை தமிழ்சினிமாவில் தக்கவைத்திருக்கிறார் நகுல். அதுமட்டுமல்ல ஒரு பின்னணி பாடகராகவும் தன்னை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறார் நகுல்.
 
ஒரு அதிரிபுதிரியான வெற்றிக்காக காத்திருக்கும் நகுல் தற்போது ‘நாரதன்’ ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் நகுலுக்கு நமது  poonththalir-kollywood தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments