வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!!!

11th of June 2014
சென்னை:தான் வீட்டிலிருக்கும்போது யார் வந்தாலும் அவர்களை அஜீத் உபசரிக்கும் விதமே அலாதியானது.இப்போது சொல்லப் போகும் சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.அது ஒரு தீபாவளி சமயம். அஜீத் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க வந்திருக்கிறார் ஒரு தொழிலாளி. அப்போது அஜீத் வீட்டிலிருந்திருக்கிறார். மருந்தடிக்கும் தொழிலாளி வந்திருப்பதை அறிந்ததும், தானே காப்பி போட்டு எடுத்து வந்து அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்தாராம்

அஜீத்தின் இந்தச் செயல் மிகுந்த வியப்பையும், நெகிழ்ச்சியையும் தந்துவிட்டது மருந்தடிப்பவருக்கு. வேலைகள் முடிந்து கிளம்ப எத்தனித்தவரைத் தடுத்து நிறுத்திய அஜீத், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.சிறிது நேரம் மருந்தடிப்பவரை நிற்கச் சொன்னவர், உள்ளே போய் பட்டாசுகள், இனிப்பு என தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கையில் ரொக்கப் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைத்தாராம்.இந்த விஷயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம் என அஜீத் வழக்கமான கட்டளையும் போட்டுதான் அவரை அனுப்பினாராம். ஆனால் சில மாதங்கள் கழித்து இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.

Comments